November 10, 2026

Seithi Saral

Tamil News Channel

வாசுதேவநல்லூர்: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மாநகராட்சி பொறியாளர் கைது

1 min read

Vasudevanallur: Engineer arrested under POCSO Act for sexually molesting a 5-year-old girl

10.11.2026
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை மாநகராட்சி பொறியாளரை தென்காசி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் பொறியாளர் பால்சாமி பீட்டர் (வயது 59). இவர் கோவை மாநகராட்சி பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் தனது சொந்த ஊரான வாசுதேவநல்லூர் பகுதிக்கு வந்துள்ளார்.அங்கு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் இந்திரா, பால்சாமி பீட்டரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பால்சாமி பீட்டர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து தென்காசி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி பால்சாமி மீட்டரை போலீசார் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *