November 10, 2026

Seithi Saral

Tamil News Channel

ரெயில் பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் சக்கர நாற்காலி சேவை

1 min read

Online wheelchair service for train passengers

10.11.2026
ரயில் பயணியரின் வசதிக்காக, பெட்டிகளை சுமந்து செல்லும், ‘போர்ட்டர்’கள் மற்றும், சக்கர நாற்காலி சேவைகளை, ‘ஆன்லைன்’ மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.

ரயிலில் அதிக பெட்டிகளுடன் அல்லது முதியோருடன் பயணம் செய்யும் பயணியர், பெட்டிகளை சுமந்து செல்லும், ‘போர்ட்டர்’களுடன் பேரம் பேசுவது, சக்கர நாற்காலிகளை தேடி அலைவது பெரும் பிரச்னையாக உள்ளது. இனி, வீட்டில் இருந்தபடியே இந்த இரண்டு சேவைகளையும், ‘ஆன்லைன்’ மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.

முதற்கட்டமாக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் ரயில்வே கோட்டத்தில், வரும் 16 முதல், ‘மொபைல் போன்’ செயலி மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், போர்ட்டர்கள் மற்றும் சக்கர நாற்காலிகளை ஆன்லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அஜ்மீர் கோட்டத்தில் அறிமுகமாகும் இந்த முயற்சி வெற்றியடைந்தால், வெகுவிரைவில், அடுத்தடுத்து நாட்டின் பிற முக்கிய ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

ரயில்வேயின், ஐ.ஆர்.சி.டி.சி., செயலி மூலம், பயணியரின் டிக்கெட்டில் உள்ள பிஎன்ஆர் எண்ணை குறிப்பிட்டு போர்ட்டர் மற்றும் சக்கர நாற்காலி சேவையை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதன் மூலம், குறிப்பிட்ட ரயில் எப்போது வருகிறது அல்லது புறப்படுகிறது, பயணியின் பெட்டி எந்த நடைமேடையில் இருந்து புறப்படும் அல்லது வந்து சேரும் என்பதை, போர்ட்டர் முன்கூட்டியே அறிந்து கொள்வார். இதனால், ரயில் நிலையத்திற்கு வந்ததும், தேவையில்லாமல் பேரம் பேசுவது அல்லது தேடி அலைவது தவிர்க்கப்படும்.

முன்பதிவுக்கான ரசீதை காண்பித்து சக்கர நாற்காலியை ரயில் நிலையத்தில் இருந்து பயணியர் எளிதில் எடுத்து செல்ல இந்த சேவை உதவும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *