November 13, 2026

Seithi Saral

Tamil News Channel

அசாமில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

1 min read

6 coaches of an express train derail in Assam

11.11.2026
அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சித்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மிசோரம் மாநிலம் சைராங் நோக்கி கொல்கத்தா – சைராங் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள டிகாரு ரெயில் நிலையம் வந்தது.

அப்போது ரெயிலை நிறுத்த முயன்றபோது, ரெயில் லோகோ பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து என்ஜின் உட்பட 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் பலர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பயணிகளுக்கு மாற்று ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *