November 13, 2026

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் மசோதா

1 min read

A bill to declare Diwali a public holiday has been introduced in the US Congress.

11.11.2026
தீபாவளி பண்டிகையை அமெரிக்காவில் அரசு விடுமுறையாக அறிவிக்க கோரும் மசோதாவை பெண் எம்.பி. கிரேஸ் மெங், அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தி உள்ளார்.
முன்னதாக இந்த மசோதாவுக்கான முன்மொழிவை இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ண மூர்த்தி, சுகாஸ் சுப்ரமணியம், தனேதர், ரோகன்னா, அமிபெரா ஆகியோர் உள்பட 19 எம்.பிக்கள் ஆதரித்திருந்தனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆசிய பசிபிக் அமெரிக்க கூட்டமைப்பின் தலைவரான கிரேஸ் மெங் கூறும்போது, “தீபாவளி என்பது தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், அறியாமையின் மீது அறிவின் வெற்றியையும் குறிக்கிறது.

இந்துக்களுக்கு எதிரான மற்றும் தெற்காசியர்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வரும் இக்காலத்தில் தீபாவளியை ஒரு கூட்டாட்சி விடுமுறையாக அங்கீகரிப்பது இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பவுத்தர்கள் நமது சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்கள் என்ற ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்பும்” என்று கூறினார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவின் 12-வது அதிகாரப்பூர்வ தேசிய விடுமுறையாக தீபாவளி அங்கீகரிக்கப்படும். ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், இந்த மசோதாவை கிரேஸ் மெங், பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்திருந்தார். அப்போது அந்த மசோதா பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறல் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *