போதைப்பொருளுக்கு எதிராக இந்தியா-அமெரிக்கா இணைந்து போராட முடிவு
1 min read
India and the US decide to join forces to combat drugs
11/11/2026
இந்தியா-அமெரிக்கா இடையிலான 2-வது இந்தியா-அமெரிக்கா போதைப்பொருள் கொள்கை செயல் பணிக்குழு கூட்டம் டெல்லியில் செவ்வாய் அன்று நடந்தது. இந்திய தரப்புக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தலைமை இயக்குனர் அனுராக் தலைமை தாங்கினார்.
அமெரிக்க தரப்புக்கு தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு கொள்கை அலுவலக பொறுப்பு துணை இயக்குனர் டெப்பி செகுய்ன் தலைமை தாங்கினார். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை எதிர்ப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டினரும் ஆய்வு செய்தனர்.
உளவு தகவல்கள் பகிர்ந்து கொள்வது என்றும், போதைப்பொருள் அச்சுறுத்தலை சமாளிக்க இணைந்து போராடுவது என்றும் இரு நாடுகளும் முடிவு செய்தன. போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பான நடைமுறைகளை மேலும் பகிர்ந்து கொள்ள இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.