விருதுநகர்: சிறந்த கல்வி நிறுவனங்களை பார்வையிட கல்விச் சுற்றுலா
1 min read
Virudhunagar: Educational tour to visit excellent educational institutions
11.11.2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டிடும் வகையில் தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களை பார்வையிட அழைத்துச் செல்லும் கல்விச் சுற்றுலா பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி இன்று(11.11.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார் .
பின்னர், மாவட்ட அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 2026–2027 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் 3,000 மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேசிய அளவில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகள் குறித்து அறிந்து கொள்ளவும், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இன்று (11.11.2026) திருச்சியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (TNNLU) ஆகிய இரண்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 120 மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் கல்விச் சுற்றுலா செல்கின்றனர் .
பொறியியல் படிப்பிலும் சட்டப் படிப்பிலும் ஆர்வம் கொண்டு வகுப்பறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர் .
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தனித்திறன் அதிகமாக கொண்டவர்கள். தன்னம்பிக்கை அதிகமாக உடையவர்கள். சுற்றுலா செல்லும் மாணவர்கள் அங்கு பயிலும் கல்வி வளாகத்தை அறிந்து அதற்கு ஏற்ப தங்களை தயார் படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். இன்று பெரும்பாலும் உயர் பதவியில் இருப்பவர்கள் அரசுப்பள்ளியில் பயின்று தான் சென்றுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது . அதிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது .
ஆகையால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்வியினை தேர்ந்தெடுத்து எந்த கல்வி நிறுவனங்களின் பயில வேண்டும் என்பதனை இப்பொழுது தீர்மானித்து அதற்காக தங்களை முழு அளவில் தயார்படுத்தி வர வேண்டும். விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்து புரிந்து கல்வி கற்கும் பட்சத்தில் அனைத்தும் சாத்தியமாகும். எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் இந்த சிறப்பான வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன் , துணை ஆட்சியர் (பயிற்சி) பிரியதர்ஷினி, ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.