November 13, 2026

Seithi Saral

Tamil News Channel

நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து 8 பேர் பலி

1 min read

Apartment building collapses in New York; 8 people dead

13.11.2026
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள புரூக்ளின் பகுதியில், 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இன்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. அந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகள் கட்டுமானம் நடந்த இடத்தின் மீது விழுந்தன.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மழை காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது கட்டிட பணியாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *