மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்அமைச்சர் விஜய் ஆலோசனை
1 min read
Chief Minister Vijay holds consultations regarding the safety of fishermen
13.11.2026
சமீபத்தில் வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல் கரையை ஆந்திராவில் கரையை கடந்தது. அந்த சமயத்தில் மீன்பிடிக்க சென்ற சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மீனவர்களின் பாதுகாப்பு குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, மரிய வில்சன், ஸ்ரீநாத், ராஜ்மோகன், தலைமைச்செயலர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இயற்கை பேரிடரின் போது மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் போது, ” மாயமாகும் மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். கடலோர காவல்படையினர், இந்திய கடற்படை, கடலோர காவல்படை குழுமம், மீனவர் நலத்துறை இணைந்து செயல்பட வேண்டும். அவசர காலங்களில் கடலில் இருக்கும் மீனவர்களின் இடத்தை தெரிந்து வைக்க முயற்சிக்க வேண்டும்.மீனவர்கள் வைத்திருக்கும் தகவல் தொடர்பு கருவிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.