November 16, 2026

Seithi Saral

Tamil News Channel

ஐதராபாத்தில் நகைக்காக தமிழக பெண்ணை கொன்ற கல்லூரி பேராசிரியர்

1 min read

College professor kills woman from Tamil Nadu for her jewelry in Hyderabad

15.11.2026
தமிழ்நாட்டை சேர்ந்தவர் அருண்குமார். மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி அனிதா. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வேலை சம்பந்தமாக அருண்குமார் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஜில்லல் குடா, தாதுநகர், லட்சுமி அப்பார்ட்மெண்ட் 3-வது மாடியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

கடந்த புதன்கிழமை காலை அருண்குமார் வேலைக்கு சென்று விட்டார். அனிதா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனியாக இருந்தார்.

அதே அப்பார்ட்மெண்ட்டின் 4-வது மாடியில் வசித்து வந்தவர் ராஜ்குமார் (வயது41). கல்லூரி பேராசிரியராக வேலை செய்து வந்தார்.

ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான ராஜ்குமார் வேலையை விட்டுவிட்டார். உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாட்டம் ஆடி வந்தார். இதில் ராஜ்குமாருக்கு ரூ.4 கோடிக்கு மேல் கடனானது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்தனர். 3-வது மாடியில் வசிக்கும் அருண்குமார் மத்திய அரசு பணியில் இருப்பதால் அவரது வீட்டில் அதிக அளவில் நகை, பணம் இருக்கும் என எண்ணினார்.

மேலும் அனிதா அதிக அளவில் நகையை அணிந்து இருந்ததால் அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார். அதன்படி புதன்கிழமை காலை அருண் குமார் மற்றும் குழந்தைகள் வெளியே சென்ற பிறகு ராஜ்குமார் ஹெல்மெட் அணிந்து அருண்குமார் வீட்டிற்கு சென்றார்.

காலிங் பெல்லை அடித்த போது அனிதா கதவைத் திறந்து யார் என கேட்டார். அதற்குள் அனிதாவை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் இழுத்துச் சென்றார்.

இதனைக் கண்ட அனிதா கத்தி கூச்சலிட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் தான் கொண்டு சென்ற பிளாஸ்திரியை அனிதாவின் வாயில் ஒட்டி கை, கால்களை கட்டினார். போலீசில் தன்னை காட்டி கொடுத்து விடுவார் என பயந்து அங்கிருந்த அயன் பாக்சை எடுத்து அனிதாவின் தலையில் 20 முறை பலமாக தாக்கினார். இதில் அனிதாவின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

அனிதா இறந்ததை உறுதி செய்த ராஜ்குமார் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு, கம்மல், வளையல் மற்றும் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார். மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிள்ளைகள் தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த ராஜ்குமார் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆஸ்பத்திரியில் அனிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அருண்குமார் இது குறித்து மீர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் அதே அப்பார்ட் மெண்ட் 4-வது மாடியில் வசிக்கும் ராஜ்குமார் அனிதாவை கொலை செய்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் ராஜ்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கடனை அடைக்க கல்லூரி பேராசிரியர் ஒருவர் கொலைகாரனாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *