November 16, 2026

Seithi Saral

Tamil News Channel

கடற்படை வார விழா: சென்னை சிம்பொனி இசை நிகழ்ச்சி

1 min read

Navy Week Celebrations: Symphony Concert in Chennai15.11.2026
கடற்படை விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை சார்பில் நவம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்டமான ‘நேவல் சிம்பொனி’ இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

1971-ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ நடவடிக்கையின் போது, கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய கடற்படை மேற்கொண்ட துணிச்சலான இரவு நேர தாக்குதலின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதி ‘இந்திய கடற்படை நாள்’ கொண்டாடப்படுகிறது.

அதை முன்னிட்டு நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், மறைந்த கமடோர் கே.பி. கோபால் ராவின் நூற்றாண்டு பிறந்தநாள் நினைவுகூரப்பட்டு, அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னையை சேர்ந்த கமடோர் கே.பி. கோபால் ராவ், வரலாற்று சிறப்புமிக்க ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ நடவடிக்கையின் போது ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக ‘மகா வீர் சக்ரா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற கடற்படை இசை நிகழ்ச்சியில், இசைக்குழுவின் வளமான இசை பாரம்பரியம், திறன், துல்லியம் ஆகியவை வெளிப்பட்டன. இதில் வீர உணர்வை தூண்டும் இசை, தேசபக்தி பாடல்கள் மற்றும் சிம்பொனி பாணியிலான இசை தொகுப்புகள் என பல்வேறு அற்புதமான படைப்புகள் வழங்கப்பட்டன.

நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த இசை நிகழ்வில் சுமார் 1,900 பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் 200 முக்கிய பிரமுகர்கள், முப்படைகள் மற்றும் சிவில் நிர்வாகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள், கடற்படை முன்னாள் வீரர்கள், பொதுமக்கள், மற்றும் 900-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் என்.சி.சி கேடட்டுகள் ஆகியோர் அடங்குவர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *