தென்காசி: புத்த, சமண, சீக்கிய மதத்தினர் பயணம் மேற்கொள்ள ரூ.10 ஆயிரம் நிதி
1 min read
Tenkasi: Financial assistance of Rs. 10,000 for followers of Buddhism, Jainism, and Sikhism to undertake pilgrimages
17.10.2026
தென்காசி மாவட்டத்தில் உள்ள
புத்த மதத்தினர், சமண மதத்தினர், சீக்கிய மதத்தினர் பயணம்
மேற்கொள்ளவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர். 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்ட நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புனித தலங்களின் விவரம்:
புத்த மதம் 1. பீகாரில் உள்ள புத்த கயா. 2. உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர்- 3. வாரணாசியில் உள்ள சாரநாத் கோவில், 4. பீகாரில் உள்ள ராஜ்கிர் வைஷாலி, 5. நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற இடங்கள்.
சமண மதம் 1. இராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமண கோவில், 2. ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி 3. குஜராத்தில் உள்ள பாலிடனா, 4. பீகாரில் உள்ள பவாபுரி சமண கோவில் போன்ற இடங்கள். 5 கர்நாடகாவில் சரவணபெலகோலா.
சீக்கிய மதம் – 1. பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர் சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப். 2 பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் (குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள், 3. பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா செளதா, மண்டி சுகர்கானா, குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப். ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப்
இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் புனித பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்/சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், -600 005. என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 31.01.2027. இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.