உ.பி.யில் டெம்போ மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 5 பேர் பலி
1 min read
5 killed as ambulance crashes into a tempo in U.P.
21.11.2026
உத்தரபிரதேசத்தில் டெம்போ மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உயிரிழந்த நபரின் உடலை உத்தரபிரதேச மாநிலம் காசிபூருக்கு வெள்ளி அன்று ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். அந்த ஆம்புலன்சில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் 3 பேர், டிரைவர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பாரபங்கி மாவட்டம் காராவங் கிராமம் அருகே பூர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் முன்னே சென்ற டெம்போ மீது ஆம்புலன்ஸ் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்சியில் பயணம் செய்த 5 பேரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், படுகாயமடைந்த 5 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.