தண்டவாளங்களில் ஏஐ கேமரா அமைக்க கேரள அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
1 min read
Madras High Court directs Kerala government to install AI cameras on railway tracks
21/11/2026
தமிழ்நாடு அரசு அமைத்துள்ளதுப்போல தமிழ்நாடு-கேரள எல்லைக்கு உட்பட்ட ரயில் தண்டவாளங்களில் ஏஐ கேமராக்களை அமைக்க கேரள அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழக – கேரள எல்லையோர வனப்பகுதிகளில் ரயில் தண்டவாளங்களைக் கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், தமிழகத்தைப் போலவே கேரள வனப்பகுதி வழியாகச் செல்லும் ரயில் தண்டவாளங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாடு கேரள எல்லை வனப்பகுதியில் தண்டவாளங்களை கடக்கும் யானைகள் ரயில் மோதி இறப்பதை தடுக்க கோரிய வழக்கில் . இரு மாதத்திற்குள் ஏஐ கேமராக்களை பொருத்த கேரள அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .
கோவை மற்றும் கேரளாவின் பாலக்காடு (வாளையார், கஞ்சிக்கோடு) இடையேயான வனப்பகுதி வழியாக செல்லும் ரயில் தண்டவாளங்களைக் கடக்கும் யானைகள், அதிவேகங்கள் மோதித் தொடர்ந்து உயிரிழந்தன.இதனைத் தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க தண்டவாளங்களில் ஏஐ கேமரா பொருத்த கேரள அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் முந்தைய அறிவுறுத்தலின் பேரில், தமிழக வனத்துறை கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு (‘A’ மற்றும் ‘B’ ரயில் பாதைகள்) 12 உயர் கோபுரங்களில் 24 செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தெர்மல் (தெர்மல்) கேமராக்களைப் பொருத்தியது.
இதன் மூலம் யானைகள் தண்டவாளத்தை நெருங்கும்போதே கட்டுப்பாட்டு அறைக்கும், ரயில் ஓட்டுநர்களுக்கும் உடனடி எச்சரிக்கை சென்று, ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு யானைகள் உயிரிழப்பானது தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது