November 21, 2026

Seithi Saral

Tamil News Channel

திருநின்றவூர் சேவாலயாவில் என்.சி.சி. தின விழா

1 min read

NCC Day Celebration at Sevalaya, Thiruninravur

21.11.2026
திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா மையத்தில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தின விழா சனிக்கிழமை (நவம்பர் 21) உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சி.யூ.ஆர்.ஐ. (CURI) மருத்துவமனையின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்ட (சி.எஸ்.ஆர்.) மேலாளர் எஸ். சங்கீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருந்த என்.சி.சி. கண்காட்சியை அவர் திறந்து வைத்துப் பார்வையிட்டதுடன், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்கள் 13 (தமிழ்நாடு) பட்டாலியன் என்.சி.சி. பிரிவில் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *