சங்கரன்கோவிலில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்
1 min read
Special camp to locate missing persons in Sankarankovil
22.11.2026
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம் சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா, புகார் மனு அளித்த மனுதாரர்களை அழைத்து காணாமல் போனவர்கள் பற்றிய வேறு ஏதாவது விவரங்கள் தங்களுக்கு தெரிந்திருந்தால் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அப்போது சங்கரன்கோவில் டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார், பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.