November 23, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டம் உதயமான நாள் – அதிமுக கொண்டாட்டம்.

1 min read


The day Tenkasi district was formed – AIADMK celebrates

22.11.2026
தென்காசி மாவட்டம் அமைத்து தந்த முன்னாள் முதல்வர் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் முன்பாக பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது..

இந்த நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் பெற்று தந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரருமான எஸ் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் தென்காசி நகர அதிமுக செயலாளர் வே. சுடலை ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

அதிமுக ஆட்சியின் போது கடந்த 22_11_2019 அன்று அன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருக்கரங்களால் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தனியாக பிரித்து தென்காசி மாவட்டம் தமிழகத்தின் 33 வது மாவட்டமாக உதயமானது, இதனை கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் முன்பு அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுக பொதுச்செயலாளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது,

இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர அதிமுக செயலாளர் சுடலை, மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அகமதுஷா, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, நகர அவைத்தலைவர் முத்துக்குமாரசாமி, இணை செயலாளர் மைமூன்பீவி, பிரதிநிதிகள் சுப்பிரமணியன், கருப்பசாமிராஜா, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சாமி ஆசாரி, ஸ்டீல் மாரியப்பன், மாரிமுத்து, நெல்லை குமரேசன், ஜெ. ஜெ காதர், முருகன்ராஜ், ஆசாத்நகர் முருகன், செங்கோட்டை சிற்பி கண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகேசன், வார்டு கழக செயலாளர்கள் சந்தோஷ், செல்வராஜ் காதர் மைதீன், திருமலைசாமிதேவர், தமிழ்செல்வன், கல்யாணகுமார், ராம்தாஸ், செய்யது அலி பாதுஷா, பீர்முகமது, பாதுஷா, ஷாகுல்ஹமீது, ஐயப்பன், சுடலைமுத்து, மகேஸ்வரன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், முருகையா, வாய்க்கால்பாலம் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *