கடையம் திருவள்ளுவர் கழக கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது
1 min read
The Kadayam Thiruvalluvar Kazhagam meeting is taking place on Saturday
26-.11.2026
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் திங்கள் சிறப்புக் கூட்டம் வருகிற 28.11.2026 (சனிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு, கடையம் வடக்குத் தேர் தெருவில் உள்ள கே.எஸ்.எஸ். சிற்றரங்கத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்த் தென்றல் திரு. ஆ. சேதுராமலிங்கம் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். “கண்ணதாசன் தேடிய கண்ணன்” என்ற தலைப்பில் கல்லூரிக் கல்வி முன்னாள் இணை இயக்குநர் அ. சுப்பையா பாண்டியன் சிறப்புரையாற்றுகிறார்.
“இளசைக் கவிஞனின் வளசை வாழ்வு” என்ற தலைப்பில் எழுத்தாளர் வே. ஐயப்பன் உரையாற்றுகிறார்.
முன்னதாக சேவாலயா – செல்லம்மா பாரதி கற்றல் மைய (கடையம்) மாணவியர் இறைவணக்கம் பாடுகிறார்கள்.
கிருஷ்ணபொன்ஜோதி வரவேற்கிறார். நி. இந்திரஜித் குறள் சிந்தனை பேசுகிறார். ரா. சங்கர கோமதி நன்றி கூறுகிறார்..
கடையம் திருவள்ளுவர் கழக செயற்குழு உறுப்பினர் திரு. சி. கணபதி விருந்து போற்றல் செய்கிறார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு செயலாளர் கல்யாணி சிவகாமிநாதன் மற்றும் திருவள்ளுவர் கழகத்தார் செய்து வருகிறார்கள்.