November 30, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடி அருகே டயர் வெடித்து தடுப்புச் சுவரில் மோதிய கார்

1 min read

Car hits median after a tyre bursts near Puliyangudi

29/11/2026
​தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி சுங்கச்சாவடி (டோல்கேட்) அருகில், முன்னாள் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

​யாமம்பட்டி (எமன்பட்டி) பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மகேந்திரன் என்பவர், தென்காசியில் இருந்து எமன்பட்டி நோக்கி இன்னோவா காரை ஓட்டிச் சென்று . கொண்டிருந்தார். சிந்தாமணி சுங்கச்சாவடி அருகே கார் வந்தபோது, எதிர்பாராதவிதமாக காரின் முன்பக்க டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது.
​இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் வேகமாக மோதி நின்றது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *