November 29, 2026

Seithi Saral

Tamil News Channel

தொகுதி மறுவரையறை மசோதா; மத்திய அரசுக்கு எம்பிக்கள் 371 பேர் ஆதரவளிக்க வாய்ப்பு

1 min read

Delimitation Bill: 371 MPs likely to support the Central Government

29.11.2026
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின் சிறப்புக் கூட்டம் இன்று (நவம்பர் 30) துவங்குகிறது. மகளிர் இடஒதுக்கீட்டுக்கு வழிசெய்யும் தொகுதி மறுவரையறை மசோதா உட்பட மூன்று மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த ஏப்ரலில், இந்த மசோதா தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தி.மு.க, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்துள்ளன.

பாராளுமன்றத்தின் லோக்சபாவில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள, அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற, உறுப்பினர்கள் வருகை தந்து ஓட்டளிப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. இதன்படி, 356 ஓட்டுகள் தேவைப்படும் நிலையில், 371 எம்.பி.,க்களின் ஆதரவு கிடைக்கும் என ஆளும் தரப்பில் கணக்கிடப்பட்டுள்ளது.
லோக்சபாவில் மொத்தம், 543 இடங்கள் உள்ளன. இதில், மூன்று இடங்கள் காலியாக உள்ளன. மீதமுள்ள 540 பேரும் இந்த ஓட்டளிப்பில் பங்கேற்றால், பெரும்பான்மைக்கு, 360 எம்.பி.,க்களின் ஆதரவு தேவை. ஆனால், தற்போதைய சூழலில், சில உறுப்பினர்கள் இந்த ஓட்டுப்பதிவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திரிணமுல் காங்., – எம்.பி., கல்யாண் பானர்ஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், அவரால் ஓட்டளிக்க முடியாது. ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த எம்.பி., ஷேக் அப்துல் ரஷீத், பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் எம்.பி., அம்ரித்பால் சிங் ஆகியோர் சிறையில் உள்ளதால், இவர்களால் ஓட்டளிக்க முடியாது. காங்கிரஸ் எம்.பி., சுதாகரன், உடல்நலக் குறைவால் ஐக்கிய அரபு எமிரேட்சில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

சாலை விபத்தில் காயமடைந்த பா.ஜ.க, எம்.பி. லட்சுமி வர்மாவும் இந்த ஓட்டுப்பதிவில் பங்கேற்பது சிரமம் என சொல்லப்படுகிறது. ஓட்டுப்பதிவில் சமநிலை ஏற்பட்டால் மட்டுமே சபாநாயகரால் ஓட்டளிக்க முடியும்.

இந்த சூழலில், தே.ஜனநாயக கூட்டணியின் 320 எம்.பி.,க்களுடன் தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவும் சேர்ந்து 355 முதல் 371 எம்.பி.,க்கள் ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு லோக்சபாவில் இந்த முறை பெரும்பான்மை கிடைக்கும் என அரசு தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *