37,681 corona per person in India; 260 killed
10.9.2021
இந்தியாவில் மேலும் 37,681 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 260 பேர் பலியானார்கள்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 34,973 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 42,942 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 74 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.90 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 260 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,42,009 ஆனது.
இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.49 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.18 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.