June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

இணையதள செய்தி நிறுவனங்களில் சோதனை

Seithi Saral featured Image

Tested on Internet news organizations

10.9.2021

‘நியூஸ்கிளிக் மற்றும் நியூஸ்லாண்டரி’ இணையதள செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களில் இன்று (செப்.10) வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

சட்டவிரோதமாக நிதி

கடந்த பிப்.,ல், 9.59 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக நிதி பெற்றதாக நியூஸ்கிளிக் என்ற இணையதள செய்தி நிறுவனத்தின்மீது, டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதையடுத்து நியூஸ்கிளிக் நிறுவனரும், ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தாவை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நியூஸ்கிளிக் நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று (செப்.10) அதிரடியாக சோதனை நடத்தினர்.
மற்றொரு இணையதள செய்தி நிறுவனமான நியூஸ்லாண்டரி நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

ஆய்வு

இந்த நிறுவனங்கள் செலுத்தும் வரி தொடர்பான விபரங்களை ஆய்வு செய்யவே, இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சோதனையில் கண்டு பிடிக்கப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த சோதனை குறித்து இந்த நிறுவனங்கள் தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.