நடிகையை இழுத்து பிடித்து முத்தம் கொடுத்து அத்துமீறிய ரசிகர்
1 min read
25.2.2020
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல நடிகை ஆஷிகா ரங்கனாத்தை ரசிகர் ஒருவர் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடகா நடிகை ஆஷிகா ரங்கனாத். 2016ம் ஆண்டு வெளியான கிரேஸி பாய் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
தற்போது கன்னட சினிமாவில் 8 படங்களை கை வசம் வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் உருவாகி வரும் கருடா படம் விரைவில் வெளி வரவுள்ளது. இந்நிலையில் நடிகை ஆஷிகா ரங்கனாத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் யாரும் எதிர்பார்க்காத போது ராஷ்மிகாவின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஷிகா ரங்கனாத்திடம் அத்து மீறிய ரசிகரை கண்டு பிடித்து அவருக்கு தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.