June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கோடை காலத்துல கண்களை எப்படி பாதுகாக்கலாம்?

1 min read
How to protect your eyes during the summer

கோடையினால் நமது உறுப்புகளில் மிகவும் முக்கியமானதாக விளங்கும் கண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அதிக வெப்பத்தால் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து அதிகம் உறிஞ்சப்படுகிறது. இதனால் கண்களில் வறட்சித்தன்மையும், எரிச்சலும் ஏற்படுகிறது.

கணினியில் பணிபுரிபவர்களுக்கு கண் பாதிப்புகள் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் கோடையில் அந்த பாதிப்பு அதிகமாகவே இருக்கும். மேலும், நாம் அதிக அளவில் குளிரூட்டிகளை (ஏசி) பயன்படுத்தும்போது அதில் இருந்து வரும் குளிர்ச்சியான காற்று நேரடியாக நம் கண்களில் படும்பொழுது கண்களில் வறட்சி மற்றும் எரிச்சல் உண்டாகும்.

கோடை காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வைரஸ் மற்றும் வீக்கம், கண்கள் சிவத்தல், கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்களில் அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

கண்களை பாதுகாக்க :

அதிக அளவு நீரை பருகுதல் வேண்டும். கண்ணிற்கு குளிர்ச்சியான கண்ணாடிகளை அணிய வேண்டும், அதிகளவு பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காற்று கண்களில் நேரடியாக படாதவாறு பார்த்துக் கொள்ளுதல், கண் பயிற்சிகள் மேற்கொள்ளுதல், அடிக்கடி கண்களை நீரால் கழுவுதல், வெள்ளரி துண்டுகளை கண்களில் வைத்தல்

தலை சுத்தமாக இல்லையென்றாலும் கண் நோய்கள் வரும். எனவே, கோடை காலத்தில் வாரம் மூன்றுநாள் தலைக்கு குளிக்கலாம். அவ்வப்போது உள்ளங்கைகளை இணைத்து தேய்த்து இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது இதமான சூட்டைக் கண்களுக்கு தரும்.

கண்களை பாதுகாக்க ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அலுவலகம் செல்லும் போது கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிட கண்களுக்கு குளுமை பரவும்.

கோடை காலத்தில் தினசரி 6 முதல் 8 மணிநேரம் உறங்குவது கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். மேலும், கண்களில் ஏற்படும் மற்ற பார்வை குறைபாடுகளுக்கும், கண்நோய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும், அருகில் உள்ள கண் மருத்துவமனையை நாடுவதே சிறந்த வழியாகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *