May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி -மத்திய அமைச்சர் அறிவிப்பு

1 min read
Seithi Saral featured Image
5 kg of rice for 80 crore poor people- Announced by the Union Minister

26.3.2020

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 26ம் தேதி வெளியிட்ட அறிவிப்புகள்,

80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும். மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு.

வீடுகள் தோறும் மூன்று மாதங்களுக்கு 1 கிலோ பருப்பு வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக 2,000 ரூபாய் வழங்கப்படும்

முதியவர்கள் விதவைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும்

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதம் இல்லாத கடன் 10 லட்சத்தில் இருந்து இருபது லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

தொழிலாளர் மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பிஎஃப் தொகை அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசே செலுத்தும். இந்த சலுகை 100 பணியாளர்களுக்கும் குறைவான நிறுவனங்கள் அல்லது 15 ஆயிரத்திற்கும் குறைவான ஊதியம் வழங்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்

பிஎஃப் தொகையிலிருந்து 75% அல்லது மூன்று மாத சம்பளம் இதில் எது குறைவோ முன்பணமாக எடுத்துக்கொள்ளலாம் அந்த பணத்தை திருப்பி செலுத்த தேவையில்லை என்ற திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும். மேற்கண்டவாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.