May 11, 2024

Seithi Saral

Tamil News Channel

உணவகங்கள், மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதி -முதல்வர் அறிவிப்பு

1 min read
Seithi Saral featured Image
Permission to operate restaurants and groceries throughout the day

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அனைத்துவிதமான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பெரி கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், மருந்து கடைகள் திறந்துள்ளன. திறக்கப்பட்டுள்ள கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதையடத்து தமிாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 26ம் தேதி அனைத்த மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பன்ஸ் முலம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் அறிக்கை வெளியிட்டார்.

அவை பின்வருமாறு…

*உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை.

*அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருள்களை வாங்க வேண்டும்.

*மளிகை, காய்கறி, மருந்துப் பொருட்களை டோர் டெலிவரி செய்ய அனுமதி. ஆனால் சமைத்த உணவுகளை ஊபர், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் டோர் டெலிவரி செய்ய அனுமதி இல்லை.

*டோர் டெலிவரி செய்வோர் அத்தியாவசிய தேவைக்கு என்ற வாசகத்தை ஓட்ட வேண்டும். வாகனங்களில் ஒட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

*விவசாய தொழிலாளர்கள், அறுவடை இயந்திரங்களின் நகர்வு அனுமதிக்கப்படுகிறது.

*கைரேகை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

*அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்படும்.

*கிராமம், நகரங்களில் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

*வெளிநாடுகளில் இருந்து வந்த 54,000 பேரை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது.54,000 பேரின் பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தடையை மீறி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.அபராதம் விதிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

*கர்ப்பிணிகளுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காசநோய், எச்ஐவி தொற்று உள்ளோருக்கு 2 மாத மருந்துகளை வழங்க வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் அவசர தேவைக்கு 108ஐ தொடர்பு கொள்ளலாம்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.