May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

காய்கறி, மளிகை கடைகளுக்கு கட்டுப்பாடு -1லட்சம் பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

1 min read
Seithi Saral featured Image
Control of Vegetable and Grocery Stores -Isolation monitoring of 1 lakh people

28.3.2020

கொரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாட்டில் 1 லட்சம் பேர் தனிமைப்பட்டுச் சிறப்பு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் பங்குகள் , காய்கறி மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் : தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதல்நிலையிலிருந்து இரண்டாவது நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 640க்கும் மேல் உள்ளது. அதில் சுமார் 66 பேர் குணமடைந்துள்ளனர்.

Swiggy, Zomato, Uber Eats உணவு விநியோக நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செயல்பட அனுமதி – முதல்வர் பழனிசாமி. கொரோனா ஒரு கொடிய தொற்று என்பதால் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும், சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டுப்பாடு அறையை உடனே தொடர்பு கொள்ள வேண்டும் – தமிழக முதல்வர் பழனிசாமி.

ஈரானில் எரிசாராயத்தைக் குடித்தால் கொரோனா குணமடையும் என்ற வதந்தியை நம்பிக் குடித்த 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மே – 3 ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் – மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.

கிரெடிட் கார்டுகளுக்கும் மாதாந்திர தவணை கட்ட வேண்டாம் : ஆர்பிஐ.

கொரோனா வைரஸ் பாதிப்பு விவகாரத்தில் சீனாவுடன் இணைந்து செயல்படவுள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிக்காக அரசு மருத்துவர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு.

காவல்துறை பணிகளைத் தேவையில்லாமல் வழக்கறிஞர்கள் விமர்சிக்கக் கூடாது என பார்கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விளைபொருட்களை 180 நாட்கள் அரசு சேமிப்புக் கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம்.சேமிப்புக் கிடங்கிற்கான வாடகைக் கட்டணத்தை 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை – தமிழக அரசு.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.