May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

வீடியோ கான்பரன்ஸ்சில் திருமண நிச்சயதார்த்தம்

1 min read
Wedding Engagement in Video Conferencing

30.3.2020

கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொரட்டி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் அமிர்தா கிருஷ்ணா. பெங்களூருவில் பிபிசில் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். எர்ணாகுளம் திருவாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ராகேஷ். சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் 29ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் ‘லாக்-டவுன்’ காரணமாக மணமக்களால் ஊருக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து முதலில் நிச்சயதார்த்தத்தை தள்ளிவைக்க தீர்மானித்தனர். அதன்பிறகு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த இரு வீட்டினரும் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் ராகேஷ் சென்னையிலும், அமிர்தா கிருஷ்ணா பெங்களூருவிலும் இருந்தனர். அதுபோல இரு குடும்பத்தினரும் அவர்களது வீடுகளில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தினர். இவர்களது திருமணத்தை ஏப்ரல் 26ம் தேதி நடத்தவும் அதில் முடிவு செய்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.