2019 – 2020ம் நிதியாண்டு கணக்கை முடிக்கும் பணி, ஜூன் வரை நீட்டிக்கப்படவில்லை
1 min read
Fiscal year 2019 – 2020 is not extended
31/3/2020
நடப்பு 2019-2020-ம் நிதியாண்டு ஜூலை வரை நீட்டிக்கப்படவில்லை என்றும் இன்றுடன் நிதியாண்டு முடிவடைகிறது என்றும் வங்கி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
நிதியாண்டு
ஏப்ரல் மாதம் முதல், மார்ச் மாதம் வரையிலான ஆண்டு, நிதியாண்டாக பின்பற்றப்படுகிறது. வணிக நோக்கில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், இந்த நிதியாண்டை பின்பற்றுகின்றன. மார்ச் மாதம், 31-ந் தேதியுடன், கணக்கை முடித்து, ஏப்பரல் மாதம் 1-ந் தேதி புதிய கணக்கை தொடங்குவார்கள்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிதியாண்டு கணக்கு முடிப்பை, ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, வங்கிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், நிதியாண்டு கணக்கு முடிப்பு, ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது என, ஆர்.பி.ஐ., அறிவித்ததாக ஒரு தகவலும் பரவியது
.
இன்றுடன்…
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-
நடப்பு, 2019 – 2020ம் நிதியாண்டுக்கான கணக்கு முடிப்பு, இன்று(செவ்வாய்க்கிழமை) முடிகிறது. இதற்காக, வங்கிகள் இன்று வழக்கம் போல், மாலை வரை செயல்படும். ஜூன், 30 வரை, நிதியாண்டு கணக்கு முடிக்க அவகாசம் வழங்கி, இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டதாக வந்த தகவல் தவறானது. எனவே, மார்ச், 31-ந் தேதியான இன்று, வழக்கம் போல் கணக்கு முடித்து, நாளை முதல் ஏப்ரல் 1-ந் தேதி புதிய கணக்கு தொடங்கப்படும். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்