June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மற்ற நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா: பரவல் குறைவு

1 min read
Seithi Saral featured Image

Corona ratio in India less than other coutry

2/4/2020
கொரோனா பரவல் மற்ற நாடுகளைவிட இந்தியாவல் குறைவு என கணிக்கப்படூடு உள்ளது.

கொரோனா

சீனாவை சின்னாபின்னப்படுத்திய கொரோன வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதன் பாதிப்பு இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளைப் போல் இல்லாவிட்டாலும், இந்தியாவிலும் அது பரவி வருகிறது. இங்கும் பலரை பலிவாங்கி உள்ளது.
கொரோனா பரவலில் கடந்த ஒரு மாதத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா குறைவான இடத்திலேயே இருப்பதாக சென்னை கணித அறிவியல் கல்வி நிறுவன புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கடந்த மாதம் (
மார்ச் )17-ந் தேதி நிலவரப்படி கொரோனா பாதித்த ஒருவரின் தொற்று மற்றொருவருக்கு பரவுவது 1.7 ஆக இருந்த நிலையில், மார்ச் 26-ந் தேதி அது 1.81 ஆக அதிகரித்தது.

ஆனால் இதே காலத்தில் உலகில் சராசரியாக கொரோனா தொற்று பரவல் ஒருவரிடமிருந்து 2 முதல் 3 பேராக இருந்தது.

அதேநேரம் மார்ச் மாதத் தொடக்கத்தில் 3 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை மாத இறுதியில் ஆயிரத்துக்கு மேலாக உயர்ந்தது.

எனினும், ஸ்பெயின், இத்தாலி, தென்கொரியா, அமெரிக்கா நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த உயர்வு மிக சமநிலையான ஒன்றாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மட்டுமின்றி உயிரிழப்பிலும் இந்தியா மற்ற நாடுகளைவிட மிகவும் குறைந்த நிலையிலேயே நீடிப்பதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

முதல் வாரத்தில் 3ல் இருந்து 43 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, அடுத்த வாரத்தில் 114 ஆகவும், மார்ச் 29-ந் தேதி 1071 ஆகவும் அதிகரித்தன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.