June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்த ஆண்டு நிகழும் சூரிய கிரகணம்

1 min read

When Solar eclipse in this year?

இந்த சார்வரி ஆண்டில் மொத்த ம் 2 சூரிய, 3 சந்திர கிரணங்கள் என மொத்தம் 5 கிரகணங்கள் நிகழ்கின்றன. இதில் ஒரே ஒரு சூரிய கிரகணம் மட்டும்தான் நமது நாட்டில் கண்ணுக்கு தெரியும். மற்றைய கிரகணங்கள் எதுவும் இந்தியாவில் தெரியாது.
கண்ணுக்கு தெரியும் சூரிய கிரகணம், ஆனி மாதம் 7&ந் தேதி (21-6-2020) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். அன்று அமாவாசை திதி மிருகசீரஷம் நட்சத்திரம் 4-ம் பாதம் மிதுன ராசியில் கன்னி லக்கினம் ராகு கிரஸ்தம் வடமேற்கு பகுதியில் கங்கண சூரிய கிரகணம் பிடித்து கிழக்கே கண்கண சூரிய கிரகணம் பிரதமை திதியில் முடிவடைகிறது.
இந்த சூரிய கிரகணம் காலை 10.22 மணிக்கு ஆரம்பமாகிறது. 12.02 மணி கிரகணத்தின் மத்திய காலம் ஆகும். பகல் 1.42 மணிக்கு கிரகணம் முடிகிறது. இந்த கிரகணம் மொத்தம் 3 மணி 20 நிமிடம் நீடிக்கும். கிரகணத்தின் போது ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்களும் சாந்திசெய்து கொள்ள வேண்டும்.
கிரகணம் முடிந்த பின் 2 மணிக்கு குளித்துவிட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றை தினம் பகல் 2 மணிக்கு மேல் சாப்பிட வேண்டும்.
கர்ப்பிணிகள் காலை 10 மணி முதல் 2 மணி வரை சூரியனை பார்க்க வேண்டாம். வெளியே வரவும் கூடாது. அவர்கள் 2 மணிக்கு குளித்துவிட்டு சூரியனை தரிசனம் செய்யலாம்.
கோவில் மற்றும் வீடுகளை பகல் 2 மணிக்க சுத்தப்படுத்தி குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும்.
21.6.2020 அன்று சூரிய கிரகணம் முடிந்த பின் பகல் 2மணிக்கு குளிக்க வேண்டும்.
இந்த கிரகணத்தால் வைசியர்களுக்கு கெடுதல் உண்டாகலாம் வனவிலங்குகளுக்கு பாதிப்பு உண்டாகலாம். பசுக்களுக்கு புதிய நோய் உண்டாகும். எங்கும் வீண் பிரச்சினை ஏற்படலாம்.
கிரகண பலன்கள்
இந்த சூரிய கிரகணம் காரணமாக சத்திரியர்களுக்கு பீடை, பயிர் விருத்தி, கொசுக்களினால் புதிய நோய் உண்டாகும். நட்த்திர பலனாக வீண் மத கலவரம், போராட்டம் உண்டாகும். உத்தராயண பலனாக, சகல ஜீவராசிகளுக்கும் சுபீட்சம் உண்டாகும். எங்கும் மழை பெய்யும்.
——–
கண்ணுக்கு தெரியாத கிரகணங்கள்
வைகாசி மாதம் 23-ந் தேதி (5.6.2020) வெள்ளிக்கிழமை அன்று பகுதி நேர சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது இந்தியாவில் தெரியாது.
ஆனி மாதம் 21-ந் தேதி (5.7.2020) ஞாயிற்றுக்கிழமை பகுதி நேர சந்திர கிரகணம் நிகழும். இது இந்தியாவில் தெரியாது.
கார்த்திகை மாதம் 15-ந் தேதி (30.11.2020) திங்கட்கிழமை சூரிய கிரகணம் நிகழும். இது இந்தியாவில் தெரியாது.

அதே கார்த்திகை மாதம் 29-ந் தேதி (14.12.2020) திங்கட்கிழமை சந்திர கிரகணம் ஏற்படும். இது இந்தியாவில் தெரியாது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *