சென்னையில் இருந்து புதிய படகு வாங்கி சொந்து ஊருக்கு சென்ற 38 மீனவர்கள்
1 min read
38 fishermen who bought a new boat from Chennai and went home
26/4/2020
ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து, ஊரடங்கு காரணமாக சென்னையில் அடைக்கலம் கொண்ட 38 மீனவர்கள் ஒரு படகு மூலம் தப்பிச் சென்று சொந்த ஊர் திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 20ஆம் தேதி இந்த மீனவர்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அடைந்தனர்.
அங்கிருந்து ஒடிசாவுக்கும் படகு மூலமாக அவர்கள் சென்றடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், சொந்த ஊருக்குத் திரும்ப 2 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு படகை விலைக்கு வாங்கி ரகசியமாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சுமார் 1000 கிலோ மீட்டர் கடல் தூரத்தை சிறிய படகில் நெருக்கமாக அமர்ந்தபடி கடந்த 38 மீனவர்களும் ஆந்திராவுக்கும் ஒடிசாவுக்கும் சென்றுள்ளனர். பெரும்பாலோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளுடன் சோர்ந்து காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.