May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

“இனி சீனாவுடன் உலக நாடுகள் வர்த்தகம் செய்யாது”- நிதின் கட்கரி கருத்து

1 min read


World countries no longer trade with China – Nitin Gadkari

26/4/2020

சீனாவுடன் இனி உலக நாடுகள் வர்த்தகம் செய்யாது என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகம் இனி சீனாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பாத சூழல் உருவாகி இருக்கிறது. இது இந்தியா தனது 5 டிரில்லயன் டாலர் பொருளாதார கனவை எட்டுவதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு நாடும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவுடன் வர்த்தகம் செய்ய பல நாடுகள் தயங்குகின்றன. இது ஒருவகையில் இந்தியாவுக்கு சாதகமான வரம்தான். புலம் பெயர்ந்த பல லட்சம் தொழிலாளர்களை திரும்ப அழைக்க உகந்த நேரம் இது  அல்ல.இவ்வாறு மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.