சீனாவில் 3 கொரோனா தடுப்பூசிகளை பரிசோதிக்க ஒப்புதல்
1 min read
Approval to test 3 corona vaccines in China
26-4-2020
சீனாவில் 3 கொரோனா தடுப்பூசிகளை பரிசோதிக்க அந்த நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளன.
கொரோனா தடுப்பூசி
கொரோனா என்று வைரஸ் முதலில் தோன்றியது சீனாவில்தான். அங்கு அந்த வைரஸ் பரவலுக்கு பலர் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
சீனாவில் முதல் கட்ட கொரோனா தடுப்பு மருந்து ஆய்வுகள் கடந்த மாத இறுதியுடன் முடிவடைந்து விட்டன.
இதில், வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளை சேர்ந்த 96 பேருக்கு பரிசோதிக்கப்பட்டது. இவர்கள் தற்போது வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
வைரஸ் தடுப்பு மருந்துக்கான இரண்டாவது கட்ட ஆய்வுகள் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
அனுமதி
சீன ராணுவம் தயாரித்தது உள்பட 3 தடுப்பு ஊசிகளை பரிசோதிக்க சீனா அரசு நேற்று அனுமதி அளித்துள்ளது.
வுகான் நுண்ணுயிரி உற்பத்தி நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை பரிசோதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில் வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் இதர நோய்கிருமிகள், வளர்ந்து நோயை உற்பத்தி செய்யும் திறனை பெறுவதால், அத்திறனை இழக்க செய்வதே மருந்தின் நோக்கமாகும்.
இதுவும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த மருத்துவ பரிசோதனைகள் முடிந்து தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தபட்சம் ஓராண்டாகும் என்று கூறப்படுகிறது.