April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு கொடுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையில் பக்கவிளைவு; அமெரிக்கா எச்சரிக்கை

1 min read
Seithi Saral featured Image

Side effect of hydroxy chloroquine tablet given to corona; America is warning

26/4/2020

கொரோனாவுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் எப்.டி.ஏ. எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயிர் கொல்லி நோயான கொரோவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மலேரியா காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த மாத்திரிரைகள் உயிருக்கு ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

அதேநேரம் கொரோனாவின் தன்மையைப் பொறுத்து கொடுக்கப்படும் ஹைட்ராக்ஸின் மருந்துகள் நோயின் வீரியத்தைக் குறைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனாலும் கொரோனாவுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் வேளையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினால் உண்டாகும் பக்க விளைவுகள் ஆய்வு நடத்த வேண்டும்.

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க இந்த மருந்துகள் பாதுகாப்பானவை அல்லது பயனுள்ளவை என நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இதய நோய்கள் உள்ளவர்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இவ்வாறு எப்.டி. ஏ. கருத்துக்கூறியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.