May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

ஊரடங்கை அறிவிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்திய சுவீடன்

1 min read
Seithi Saral featured Image


Sweden, which controlled Corona without announcing a curfew

27-4-2020

கொரோனா சீனாவில் உருவானாலும் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. எத்தையோ உயிர்களை காவு வாங்கினாலும் இன்னும் அதன் வெறித்தனம் அடங்கவில்லை.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலகில் பல நாடுகள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளன.

உலகில் மேலும் சில நாடுகளில் ஊரடங்கை அறிவிக்காவிட்டாலும் அங்கெல்லாம் பாதிப்பு எண்ணிக்கை குறைவு..

ஆனால்,

ஐரோப்பிய நாடான சுவீடனில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் ஆரம்ப கால பாதிப்பு எண்ணிக்கை எந்த அளவில் இருந்ததோ அதே எண்ணிகை ஸ்வீடனிலும் இருந்தது..

ஆனால்,

இன்று வரை ஊரடங்கை அறிவிக்காமலே கொரோனோ வைரஸை கட்டுக்குள் வைத்துள்ளது..

உதாரணமாக சொல்ல வேண்டுமானால், இந்தியாவை விட  அதிகமான கொரோனா நோயாளிகள் ஒரு காலக்கட்டத்தில் ஸ்வீடனில் இருந்தனர், இந்தியா ஊரடங்கு அறிவித்தும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது,

ஆனால் சுவீடன் ஊரடங்கு அறிவிக்காமலே இந்தியாவைவிட குறைவான எண்ணிக்கைக்கு வந்துவிட்டது..

இது அந்த நாட்டு அரசாங்கத்தின் சாதனை என்பதைவிட அந்த நாட்டு மக்களின் சாதனை என்று தான் சொல்லவேண்டும்..

நாட்டு எல்லைகளை மூடியதை தவிர வேறு எந்த கட்டுப்பாடுகளையும் அந்த நாடு மக்கள் மீது அரசு திணிக்கவில்லை..

ஆனால்,

அந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமக்கு தாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு கொரோனா பரவாமல் தற்காத்துக்கொள்கின்றனர்,

ஆம்,

நெடுஞ்சாலைகளில் 25 சதவீதம் போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது, பல ஊழியர்கள் வீட்டிலிருந்தே தங்கள் பணிகளை செய்கின்றனர், வீட்டை விட்டு வெளியில் வந்தாலும் சமூக இடைவெளியை மிகச்சிறப்பாக கடைபிடிக்கின்றனர்,

ஓட்டல், கிளப், பார் ஷாப்பிங்மால் என எல்லாமுமே அங்கு திறந்திருந்தாலும் 25 சதவீதத்திற்கு மேல் அங்கு கூட்டம் இல்லை..

தற்போது வரை ஸ்வீடனில் 18,177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 2,192 பேர் வரை மரணம் அடைந்திருந்தாலும்,

அந்த நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை, மக்கள் வேலைவாய்ப்பை இழக்கவில்லை, தனிமனித சுதந்திரம் பறிக்கப்படவில்லை, மாணவர்களின் கல்வி தடைபடவில்லை எனும்போது இது ஒரு சாதனையான விஷயம் தானே…

இதே தளர்வு இந்தியாவில் இருந்திருந்தால் பாதிப்பு எண்ணிக்கை எத்தனை கோடி இருந்திருக்கும் என்பதை நேற்று வீதிகளில் சுயக்கட்டுப்பாடுகள் இல்லாமல் கூடிய மக்களே உதாரணம்..

சுயக்கட்டுப்பாடு இல்லாத இந்திய மக்களை நம்பி மே 3″க்கு பிறகும் ஊரடங்கை இந்தியா தளர்த்துமா என்பதும் கேள்விக்குறியே..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.