May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

பூமிக்கடியில் பதுக்கிய சிலைகள் பறிமுதல்; விஏஓ., உட்பட 5 பேர் கைது

1 min read
Seithi Saral featured Image

The seizure of statues lurking under the earth; Five arrested, including VAO

27-4-2020

பூமிக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 6 சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வி.ஏ.ஓ. உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாமி சிலைகள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்துார் பகுதிகளில் மாந்திரீகம் என்ற பெயரில், பூமிக்கடியில் தங்க சிலைகள் உள்ளதாகவும், யாக பூஜை நடத்தினால் பழமையான சிலைகள் எடுக்கலாம் என, ஒரு கும்பல் மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனடிப்படையில், கமுதி வட்டம் பேரையூர் அருகே ஆனையூரில், கடந்த சில வாரங்களுக்கு முன் யாகபூஜை நடத்தினர்.

அப்போது தங்க சிலைகளுக்கு பதிலாக, பழமையான சிலைகள் கிடைத்தன. பழமையான சிலைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என திட்டமிட்ட கும்பல், கமுதி அருகே தோப்படைபட்டியில் பூமிக்கடியில் பதுக்கி வைத்து, விற்பனை செய்ய காத்திருந்தனர்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, .வருண்குமார்  அவரது பிரத்யேக செல்போன் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி சூப்பிரண்டு விவேக், முதுகுளத்துார் துணை சூப்பிரண்டு  ராஜேஷ், கமுதி துணை சூப்பிரண்டு மகேந்திரன் மேற்பார்வையில் ராமநாதபுரம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கைதுஇதில், தோப்படைபட்டியில் பூமிக்கடியில் பதுக்கி வைத்திருந்த 6 சிலைககள், யாக பூஜையில் பயன்படுத்தப்படும் நாணயங்கள், மாந்திரீகம் செய்த தகடுகள், மிளிரும் அலங்கார கற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முதுகுளத்துார் செல்வக்குமார், தோப்படைபட்டியை சேர்ந்த புதுக்கோட்டை விஏஓ. செல்லப்பாண்டி, முருகராஜ், ஏனாதியைச் சேர்ந்த முத்து, கீழகாஞ்சிரங்குளம் ஓய்வு பெற்ற தலையாரி மகாதேவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.