ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு
1 min read
Opportunity to extend curfew further
ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க பிரதமரிடம் மாநில அரசுகள் கோரிக்கை
28/4/2020
கொரோனா பரவலை தடுப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள் ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது விலக்கிக்கொள்ளலாமா? என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அவருடன் உள்துறை மந்திரி அமித் ஷாவும் ஆலோசனையில் பங்கேற்றார்.
தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ஒடிசா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மே 3-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் பீகார், அரியானா உள்ளிட்ட சில மாநில அரசுகளும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது-