சென்னையில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
1 min read
47 coroners infected in Chennai
28/4/2020
சென்னையில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
47 பேருக்கு
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் எத்தைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை தினமும் மாலையில் அறிவிக்கிறார்கள். அதன்படி நேற்று( திங்கட்கிழமை) மாலையில் அறிவிக்கப்பட்டது.
நேற்று தமிழகத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 33 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள். இதனால் 1937 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்ட ஆண்கள் 1,312. பெண்கள் 625 பேர்.
இதில் சென்னையில் மட்டும் 47 பேருக்கு கொரோனா பாதித்து உள்ளது. மதுரையில் 4 பேருக்கும், விழுப்புரத்தில் ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது,
நேற்று மட்டும் 81 பேர் குணம் அடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை தொத்தம் 1,101 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று கொரோனாவால் யாரும் இறக்கவில்லை. இதுவரை மொத்தம் 22 பேர் இறந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக…
கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மாட்ட வாரியாக வருமாறு:- சென்னை- 570, கோவை-141, திருப்பூர்-112, திண்டுக்கல்-80, மதுரை -79, ஈரோடு-70, நெல்லை- 63, நாமக்கல்-59, செங்கல்பட்டு-58, தஞூசை-55, திருவள்ளூர்-53, திருச்சி-51, விழுப்புரம்-48. நாகப்பட்டினம் -44, தேனி-43. கரூர்-42, ராணிப்பேட்டை39, தென்காசி-38, விருதுநகர்- 32, சேலம்-31, திருவாரூர்-29, தூத்துக்குடி-27, வேலூர்22, கடலூர்- 26. காஞ்சிபும்19, திருவண்ணாமலை-15, ராமநாதபுரம்-15, திருப்பத்தூர்-18, சிவகங்கை-12, நீலகிரி-9, பெரம்பலூர்-7, கள்ளக்குறிச்சி-6, அரியலூர்-6, புதுக்கோட்டை-1, தருமபுரி-1,