June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவுக்கு சொந்தமான இடத்தில் பாகிஸ்தான் தேர்தல் நடத்த முடிவு

1 min read
Seithi Saral featured Image


Pakistan decides to hold elections in India

4-5-2020

,e;jpயாவுக்கு சொந்தமான இடத்தில் பாகிஸ்தான் தேர்தல் நடத்த முடிவு செய்திருக்கிறது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவின் இடம்

பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகும்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் பிராந்தியத்தில் தேர்தல் நடத்த அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்துள்ளார்.
இந்த இடங்களில் பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில், கடந்த வாரம் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. அந்த பகுதியில் வருகிற செப்டம்பர் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கும், அதுவரை இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கும் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

கண்டனம்

இந்தியாவுக்கு சொந்தமான அந்த இடத்தில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கும், இடைக்கால அரசை அமைப்பதற்கும் இந்திய கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரி ஒருவரிடம் இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் பகுதிகளை உடனடியாக காலி செய்யுமாறு இந்திய அரசு பாகிஸ்தானிடம் வலியுறுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *