May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

காய்கறி மார்க்கெட்டுக்கு 3 மணி நேரம், மதுக்கடைக்கு 7 மணி நேரமா?: ஆந்திராவில் பெண்கள் போராட்டம்

1 min read
3 hours for vegetable marketing, 7 pm to the bar ?: Andhra Pradesh
Women struggle

5-5-2020

ஆந்திராவில் காய்கறி மார்க்கெட்டுகளை திறக்க 3 மணி நேரமே அனுமதி கொடுத்த நிலையில் , மதுக்கடைக்கு மட்டும் 7 மணி நேரம் கொடுத்ததற்கு பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மதுக்கடைகள்

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த 3-ந் தேதி நிறைவடைந்தது. இதனை அடுத்து ஊரடங்கு மே 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதேநேரம் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி கொரோனா தொற்று அதிகம் இல்லாத இடங்களில்மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து ஆந்திரா, கர்நாடகம் உள்பட சில மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்துவிட்டனர். தமிழக எல்லையில் வசிப்பவர்கள் அந்த மாநிலங்களுக்குச் சென்று மது பாட்டில்களை வாங்கி வருகிறார்கள்.
தமிழகத்தில் 7-ந் தேதி முதல் மதுக்கடைகளை திறக்கிறார்கள். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். சென்னை சிவப்பு மண்டலமாக இருப்பதால் அங்கு மதுக்கடைகள் திறக்கப்படாது.

பெண்கள் போராட்டம்

இந்த நிலையில் ஆந்திராவில் காய்கறி கடைகளைவிட மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகமாக இருப்பதை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். தொடக்கத்தில் காய்கறி மார்க்கெட்டுகள் நீண்ட நேரம் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மக்கள் எந்த நேரமும் பொது இடங்களில் உலா வந்த வண்ணம் இருந்தனர். மேலும் பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை.

இதனால் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள் 3 மணி நேரம் மட்டுமே திறந்திருக்க உத்தரவிடப்பட்டது..

ஆனால் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் விசாகப்பட்டினத்தில் பெண்கள் திடீரென நடு ரோட்டுக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். ‘‘அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் காய்கறி மார்க்கெட்டுகள் 3 மணி நேரம் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுக்கடைகளுக்கு மட்டும் 7 மணி அனுமதி எப்படி வழங்கலாம்?’’ எனக்கூறி

இந்த போராட்டத்தை நடத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.