May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு

1 min read
Seithi Saral featured Image


Coronation affects 50 people in Tenkasi district

5-5-2020

தென்காசி மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவி வந்தபோது தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று அறவே இல்லாமல் இருந்தது. ஆனால் பின்னர் அந்த மாவட்டத்திலும் கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. புளியங்குடி பகுதியில் அதிகமாக கொரோனா தொற்று இருந்ததாக கூறப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 40 ஆக இருந்தது. நேற்று முன்தினம் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 49 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தென்காசி மாவட்டத்தில் 50 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை கலெக்டர் ஆலோசனை

அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு குறித்தும் மற்றும் எந்தந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என வனிகர் சங்கங்கள்,மற்றும் அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா கூறியதாவது:-
பெரிய வணிக வளாகங்கள், பல்பொருள் அச்சுபொருட்கள் டீக்கடை, சலூன் நிலையம், அழகு நிலையம், மசாஜ் சென்டர், நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்,நகைக்கடைகள்,குளிர் சாதன வசதியடன் கூடிய ஜவுளிகடைகள், டாக்rp. ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, அடுக்குமாடி வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகிய இவைகள் இயங்க அனுமதி இல்லை.
பெரிய தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தனியாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள்,வேளாண் சார்ந்த தொழில்கள் தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும் மருத்துவ பணிகள் மற்றும் அத்தியாவாசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள் வங்கிகள் அம்மா உணவகங்கள், ஏடிஎம், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

வுழிபாட்டுதளங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள். திரையரங்குகள் கேளிக்கை கூடங்கள் மது கூடங்கள்,உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தளங்கள் , உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள்,கூட்டரங்குகள் போன்ற இடங்கள்.; அனைத்து வகையான சமய ,சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள். பொது மக்களுக்கான விமான, ரெயில்.பொது பேருந்து போக்குவரத்து. டாக்சி, ஆட்டோ,சைக்கிள் ரிக்ஷா.மெட்ரோ ரெயில்,மாநிலங்களுக்கு இடையான பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையான பொதுமக்கள் போக்குவரத்து,தங்கும் விடுதிகள் (பணியாளர் வீடுதிகள் தவிர தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்ற கூடாது.
திருமண நிகழ்ச்சிகளுக்கு,தற்போது நடைமுறைகள் தொடரும். கொரேனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுபடுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைளுக்கு பொதுமக்கள் முழு தரவையும்,ஒத்துழைப்பையும்,நல்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.