June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலி; கோயம்பேடு வியாபாரியும் இறந்தார்

1 min read


Four killed in Chennai overnight; Koyampet merchant also died

8-4-2020
சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். இதில் கோயம்பேடு வியாபாரியும் ஒருவராவார்.

கொரோனா

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவையும் பாடாய் படுத்துகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சென்னையில், ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. நேற்று(வியாழக்கிழமை) மட்டும் சென்னையில் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2644 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு கோயம்பேடு மார்க்கெட்தான் மையாக விளங்குகிறது.

3 பேர் சாவு

இந்தநிலையில், சென்னையில் இன்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் கடந்த 5-ந் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி இன்று இறந்தார். அவருக்கு ஏற்கனவே உடல்நல பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் ராயப்பேட்டையை சேர்ந்த 72 வயது மூதாட்டி, திருவேற்காடு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் இன்று இறந்தார்.
இந்த மூதாட்டியின் குடும்பத்தார் அனைவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோயம்பேடு வியாபாரி

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி ஒருவரும் இன்று கொரோவால் இறந்தார். இதனால் இன்று ஒரே நாளில் சென்னையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *