June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவிப்பு

1 min read


Chinese company announces anti-coroner’s discovery

8-5-2020
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்துவிட்டதாக சீன நிறுவனம் அறிவித்து உள்ளது.

கொரோனா

சீனாவில் உருவான கொரோன வைரஸ் உலக நாடுகளை தொற்றிக் கொண்டு பாடாய் படுத்துகிறது. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்துவரும் இந்த நோய்க்கு மருத்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசி கண்டறிந்துவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இத்தாலி அறிவித்தது. எலிக்கு அந்த மருந்தை செலுத்தி பரிசோதித்ததாக கூறியது.

இஸ்ரேல் தரப்பில் கொரோனாவை எதிர்க்கும் மருந்து கண்டு பிடித்து இருப்பதாகவும் அறிவித்தது.

சீன நிறுவனம்

இந்த நிலையில் கொரோனா முதலில் உருவான சீனாவில் தடுப்பு மருந்து கண்டபிடித்து விட்டதாக அந்த நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்ற அறிவித்து இருக்கிறது. அதாவது பீஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் இந்த மருந்தை தயாரித்துள்ளது. அந்த மருந்தை குரங்குகளுக்கு செலுத்தினார்கள். 3 வாரங்கள் கழித்து அந்த குரங்குகளுக்கு கொரோனா வைரசை செலுது்தினார்கள். அதன்பிறகு ஒரு வாரம் கழித்து அந்த குரங்ககுகளை சோதனை செய்து பார்த்தபோது, அவைகளின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது.
அதேநேரம், மருந்து செலுத்தப்படாத குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் செலுத்தப்பட்டது. அந்த கொரங்குகளுக்கு கொரோனா ம தொற்றுக்கு ஏற்பட்டு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால் பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *