அடுத்த மாதமும் ரேஷன் கடையில் இலவச பொருட்கள்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min read
C.M. Annonounced that Free items at the ration shop next month
13-5-2020
அடுத்த மாதமும் (ஜூன்) ரேஷன் கடையில் இலவசமாக பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி பேச்.சு
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது டெலிவிஷனின் ஒளிபரப்பப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
குறைய வாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்பு உள்ளது.
கொரோனா மேலும் பரவாமல் தடுப்பது என்பது மக்களின் கையில் தான் உள்ளது. தனிமனித இடைவெளி, மாஸ்க் போன்றவற்றை பின்பற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். அரசின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் 0.67 சதவீதம் என குறைந்து காணப்படுகிறது.
இலவச பொருட்கள்
அம்மா உணவகம் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது
.
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி தருவதால் உணவுப்பொருள் பற்றாக்குறை இல்லை. மக்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மே மாதத்தை போல அடுத்த ( ஜூன்) மாதத்திலும் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்.
பரிசோதனை மையங்கள்
இந்தியாவிலேயே அதிகளவாக 53 கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளது. எந்த அளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்களோ அந்த அளவிற்கு ஊராடங்கை தளர்த்தி இயல்பு நிலைக்கு வர முடியும். தமிழக அரசின் முயற்சியால் இறப்பு குறைக்கப்பட்டிருகிறது
கொரோனா தொற்றை பொறுத்தவரை ஏறி பின்னர் தான் இறங்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம்
குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்
.
பொதுமக்களுக்கு எந்தெந்த வழிகளில் உதவ முடியுமோ அந்தந்த வகைகளில் அரசு உதவியது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.