தமிழில் “அம்மா” என்று எழுதுவது தவறு
1 min read
Amma – This is not tamil word
19-8-5-2020
நீங்க தமிழ் ஆர்வலரா? அப்படி என்றால் இனி அம்மா என்று எழுதாதீர்கள். அது இலக்கணப்படி தவறு. அப்படி என்றால் அம்மாவை எப்படி எழுத வேண்டும்? அதற்கான விளக்கத்தை கீழே படியுங்கள்…
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் படிக்கும் போது தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் தமிழ் எழுத்துக்களை குறிப்பாக உயிர் எழுத்துகளை கற்பிப்பதற்காக படத்துடன் சொல்லி தரப்படும். அதில் அணில், ஆடு, இலை… இப்படி வரிசையாக அறிமுகப்படுத்தப்படும்.
பின்னர் புதுமையை புகுத்துகிறோம் என்று படங்களை மாற்றினார்கள். தாயின் மீது உள்ள பற்றுதலை காட்டுவதற்காக அணில் என்பதை எடுத்துவிட்டு அம்மா என்ற சொல்லை வைத்துவிட்டார்கள்.
இதில் என்ன சிக்கல் என்றால் இந்த இடத்தில் “அம்மா” என்று எழுதக்கூடாது. “அம்மை” என்று தான் எழுத வேண்டும். தாயை “அம்மை” என்று எழுதுவது, சொல்வதுதான் சரி.
அதேபோல் அப்பா என்று என்பது தவறு. அப்பன் என்பதுதான் சரி.
-முத்துமணி, எம்.ஏ., பி.எட். எம்.பில்.