June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 6,088 பேருக்கு கொரோனா உறுதி

1 min read

Corona confirmed to 6,088 people in one day in India

22-5-2020
இந்தியாவில் ஒரே நாளில் 6,088 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோன தொற்று பரவி வருகிறது. அதன் விவரத்தை மத்திய சுகாதாரத் துறை தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) 9 மணி வரை கடநத 24 மணி நேரத்தில் மட்டும் 6,088 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. 3,583 பேர் பலியாகி உள்ளனர். 660,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 48,534 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

மாநிலம் வாரியாக

இந்தியாவில் மாநிலம் வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

மராட்டியம் – 41,642 (1,454 )

தமிழகம் – 13,967 (94)

குஜராத் – 12,905 ( 773)

டெல்லி – 11,659 ( 194)

ராஜஸ்தான் – 6,227 (151)

மத்திய பிரதேசம் – 5,981 (270)

உத்தர பிரதேசம் – 5,515 (138)

மேற்கு வங்காளம்- 3,197 (259)

ஆந்திரா – 2,647 (53)

பஞ்சாப் – 2,028 (39)

பீகார் -1,982 (11)

தெலுங்கானா – 1,699 ( 45)

கர்நாடகா- 1,605 (41)

காஷ்மீர் – 1,449 ( 20)

ஒடிசா – 1,103 ( 7 )

அரியானா – 1,031 (15)

கேரளா – 690 (4)

ஜார்க்கண்ட் -290 ( 3 )

சண்டிகர் – 217( 3)

அசாம்- 203 (4)

திரிபுரா – 173 (0)

இமாச்சல பிரதேசம் – 152 (3)

உத்தர்காண்ட்- 146 (1)

சத்தீஸ்கர் – 128 (0)

கோவா – 52(0)

லடாக் – 44 (0)

அந்தமான் – 33 (0)

மணிப்பூர் -25(0)

புதுச்சேரி- 20 (0)

மேகாலயா- 14( 1)

மிசோரம்- 1 (0)

தாதர் நாகர் ஹவேலி-1(0)

நாகலாந்து – 1(0)

அருணாச்சல பிரதேசம் – 1 (0)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *