கொரோனாவை காரணம் காட்டி சீனாவில் நடந்த படுகொலைகள்- அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்கு
1 min read
The assassination of China on the grounds of Corona – US President Trump attack
22-5-2020
கொரோனாவை காரணம் காட்டியில் சீனா அரசு படுகொலைகளை அரங்கேற்றியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் பரவியது. இது இயற்கையாக உருவான வைரஸ் அல்ல என்றும், சீனாவின் ஆய்வகத்தில் இருந்து வெளியான வைரஸ் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை பல்வேறு உலகநாடுகள் சொல்லி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா சீனாவை கடுமைாக விமரிசித்து வருகிறது. காரணம் அமெரிக்காதான் கொரோனாவுக்கா எண்ணற்ற உயிர்களை பறிகொடுத்து உள்ளது.
அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆயிரமாகியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது அமைச்சர்களுடன் கொரோனாவை எதிர்ப்பது குறித்து வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.
சீனா மீது தமது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் டிரம்ப் மேலும் ஒரு தாக்குதலைத் தொடுத்தார்.
படுகொலைகள்
கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சீனாவின் மெத்தனத்தால் உலகம் முழுவதும் பெரும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக டிரம்ப் ஆவேசத்துடன் சாடினார்.