June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா

1 min read

Corona to 510 people in one day in Chennai

26-5-2020
சென்னையில் ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

510 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பற்றி சுகாதாரத்துறை தினமும் மாலையில் அறிவித்து வருகிறது. அதன்படி இன்று கொரோனா பற்றி கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று( செவ்வாய்க்கிழமை) புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 510 ஆகும். இதில் ஒருவர் தெலுங்கானாவில் இருந்து தமிழகம் வந்தவர். இதனால் சென்னையில் மொத்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது.

இன்று திருவள்ளூரில் 25 பேருக்கும், செங்கல்பட்டில் 23 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *