June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கடனுக்கு வழங்கிய தவணை காலத்தில் வட்டி வசூலிப்பதா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

1 min read


Is the interest charged during the installment of the loan? The case in the Supreme Court

27-5-2020

கொரோனா ஊடரங்காகல் வங்கிக்கடன் தவணையை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த தொகைக்கு வட்டி வசூலிபபதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடன் தவணை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இதனால் சாதாரண மனிதர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு வங்கியில் கடன் பெற்றவர்கள் அதற்கான தவணைத் தொகையை செலுத்த கால அவகாசம் அளித்து மத்திய அரசு அறிவித்தது. ரிசர்வ் வங்கி கவர்னரும் இதனை அறிவித்தார்.
ஆனால் அரசின் அறிவிப்பின் படி கடன் தவணையை செலுத்தாத காலத்திற்கு வட்டி, கூட்டு வட்டி என்று வங்கி நிர்வாகம் போட்டுவிட்டது.

வழக்கு

இந்த கடன் தவணை சலுகை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தத்தா டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை செலுத்த முதலில் மூன்று மாதங்களும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மேலும் மூன்று மாதங்களும் அவகாசம் அளித்துள்ளன.

ஆனால் இந்த அவகாச காலத்தில் வட்டி கணக்கிடப்பட்டு கடன் தாரரின் கணக்கில் சேர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடன் தவணை செலுத்த சலுகை அளித்து விட்டு அக்காலத்திற்கான வட்டி வசூலிப்பது நியாயமற்றது. சட்ட விரோதமானது.
ஏராளமானோர் ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர். இதனால் கடன் தவணை காலத்தில் செலுத்தப்படாத வட்டியை கணக்கிடுவது கூட்டு வட்டி போன்றது. இதனால் செலுத்த வேண்டிய கடன் அதிகமாகும். அத்துடன் தவணைக் காலமும் அதிகரிக்கும். எனவே கடன் தவணை சலுகைக் காலத்தில் வட்டி வசூலிக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நோட்டீசு

இந்த மனு நேற்று(செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன் ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு ‘நோட்டீசு’ அனுப்ப அமர்வு உத்தரவிட்டது.

About Author