சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் 2 பேர் தப்பி ஒட்டம்
1 min readTwo coronary patients hospitalized at Chennai hospital
30.5.2020
சென்னை அரசு ஆஸ்பத்திரியான ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோன நோயாளிகள் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
கொரோனா நோயாளிகள்
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் பாதிப்புடன், 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்திதான் சிகிச்சை அளிப்பார்கள். அந்த தனிமை காரணமாக பலர், மன ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தப்பி ஓட்டம்
அதனால், சிகிச்சையில் இருந்து தப்பி செல்வது தொடர்ந்து வருகிறது. அதன்படி, இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த, 57 வயதான ஒருவர், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு தப்பி ஓடிவிட்டார்.
அதே ஆஸ்பத்திரியில் இருந்து பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த, 63 வயது முதியவர் நேற்று (வெள்ளிக்கிழமை) தப்பிவிட்டார்.
இதுவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து, 5 பேர் தப்பி சென்றுள்ளனர். அதில், 2 பேரை போலீசார் கண்டுபிடித்து, சிகிச்சை அளித்து வருகிறார்கள். மற்ற மூன்று பேரை தேடி வருகின்றனர்.